ஒரு நடிகன் எந்த கேரக்டரிலும் நடிக்க வேண்டும்

ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்றில்லாமல் ஒரு நடிகன் எந்த கேரக்டரிலும் நடிக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் வளர்ந்து வரும் இளம் முன்னணி மலையாள நடிகர் டொவினோ தாமஸ். மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக வளர்ந்துவிட்டாலும், தமிழில் மாரி-2 படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடிக்க தேடி வந்த வாய்ப்பையும் கப்பென பிடித்துக் கொண்டார்.

இந்தப்படத்தில் இவரது கேரக்டர் என்னவென்பதும் கெட்டப் என்னவென்பதும் சஸ்பென்சாக இருந்து வந்த நிலையில் தற்போது இவரது வித்தியாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். இவரது கெட்டப்பே, இந்த வில்லன் ரோலில் ஏதோ ஸ்பெஷலாக இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்கிறது.

இவர் மலையாளத்தில் கதாநாயகனாக நடித்துள்ள ‘ஒரு குப்ரசித பையன்’ படம் நேற்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!