ஒரு மணி நேரத்திற்குள் அட்டகாச சாதனை செய்த பேட்ட பட பாடல்

சென்னை:
ஒரு மணி நேரத்திற்குள் அசால்ட்டாக சாதனை செய்துள்ளது பேட்ட படத்தின் மரண மாஸ் பாடல்.

2.0 பிளாக்பஸ்டர் ஆகியுள்ள நிலையில், அடுத்து ரசிகர்கள் எதிர்பார்ப்பு முழுவதும் ரஜினியின் அடுத்த படமான பேட்ட மீது தான் உள்ளது.

நேற்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் முதல் பாடல் ‘மரண மாஸ்’ வெளியாகி வைரலாகி வருகிறது. அனிருத் இசையமைத்திருந்த இந்த பாடலுக்கு விவேக் வரிகள் எழுதியுள்ளார்.

வெளியாகி ஒரு மணி நேரத்திற்குள் மரண மாஸ் பாடல் 1 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்து வருகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!