ஒஸ்காருக்கு 91 வயது

வாழ்வில் ஒரு முறையாவது ஒஸ்கார் பெற வேண்டும் என்பதே திரையுலக நட்சத்திரங்களின் எதிர்பார்ப்பு. இன்றும் அதே போன்ற ஒருநாள்.

91 ஆவது ஒஸ்கார் விருது வழங்கும் விழா இன்று லொஸ் எஞ்சல்ஸில் இடம்பெற்றது.

இம்முறை பரவலாக எதிர்பார்க்கப்பட்ட பொஹெமியன் ராப்சோடி திரைப்படம் 4 விருதுகளை தன்வசப்படுத்தியது.

ஒஸ்கார் விருது வழங்கல் விழா லொஸ் ஏஞ்சல்ஸில் இன்று காலை ஆரம்பமாகியது.

ரோமா மற்றும் த பேவரிட் ஆகிய திரைப்படங்கள் அதிக பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

தலா 10 பிரிவுகளில் இரண்டு படங்களும் பரிந்துரை செய்யப்பட்டன.

எனினும், த பேவரிட் திரைப்படம் ஒரு விருதினை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

ரோமா, க்ரீன் புக், மற்றும் ப்ளக் பாத்னர் ஆகிய திரைப்படங்கள் தலா 3 விருதுகளை பெற்றுக் கொண்டன.

இம்முறை ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில் த பேவரிட் (The Favourite) திரைப்படத்தில் நடித்த, ஒலிவியா கொல்மன் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுக் கொண்டார்.

சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருது பொஹெமியன் ராப்சோடி திரைப்படத்தில் நடித்த ரெமி மலெக் வசமானது.

பாடகி லேடி காகா முதன்முறையாக ஒஸ்கார் விருதினை தன்வசப்படுத்தியுள்ளார்.

சிறந்த தயாரிப்பாளருக்கான விருது இம்முறை ரோமா திரைப்படத்தின் தயாரிப்பாளர் அல்போன்சோ குவாரொனுக்கு கிடைத்துள்ளது.

சிறந்த வௌிநாட்டு மொழி திரைப்படத்திற்கான விருது ரோமா திரைப்படத்திற்கு கிடைத்தது.

Sharing is caring!