ஓவியா! சமூக வலைத்தளங்களில் வைரலாகும் 90ml…வீடியோ

ஓவியா நடிப்பில், அனிதா உதீப் இயக்கத்தில், சிலம்பரசன் இசையமைத்துள்ள அடல்ட்ஸ் ஒன்லி படமான சர்ச்சைக்குரிய ’90 ML’ன் ட்ரெய்லர் ரிலீசாகி, சமூக வலைதளங்களை திக்குமுக்காட வைத்து வருகிறது.

பிக் பாஸ் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற நடிகை ஓவியா, கதாநாயகியாக நடித்துள்ள ’90 ML’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அனிதா உதீப் இயக்கியுள்ள இந்த படத்திற்கு, சிலம்பரசன் இசையமைத்துள்ளார். ஆன்சன் பால், மஸூம் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 5 இளம் பெண்களின் வாழ்க்கையை  மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் சென்சாரில் A சர்டிபிகேட்டை பெற்றுள்ளது.

இதனால், ‘ஓவியா ஆர்மி’ இந்த படத்தை வெகுவாக எதிர்பார்த்து காத்திருந்தனர். படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியானது. எதிர்பார்த்ததை போலவே, படத்தில் லிப் லாக், சரக்கு, கஞ்சா, அடிதடி என ஓவியா எக்கச்சக்க அலப்பறைகளை செய்துள்ளார். படத்தின் டிரெய்லர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Sharing is caring!