கஜா புயலுக்கு திரையுலகினர் ஒவ்வொருவராக உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் சின்னாபின்னமாகி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு, அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும், பொதுமக்களும், நடிகர்களும் உதவி வருகின்றனர்.

இந்நிலையில் கஜா புயலுக்கு திரையுலகினர் ஒவ்வொருவராக உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன், டுவிட்டரில், கஜா புயலில் சிக்கி பெரும் பாதிப்புக்கு உள்ளான நமது உறவுகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிட அனைவரும் கை கொடுப்போம் என பதிவிட்டுள்ளார்.

மேலும் தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம், நிதி உதவி அளித்திருப்பதுடன், தனது ரசிகர் மன்றம் மூலமாக ரூ.10 லட்சத்திற்கான நிவாரண பொருட்களையும் வழங்கி உள்ளார்.

Sharing is caring!