கஞ்சா புகைக்கும் ஹன்சிகா

அறிமுக இயக்குனர் ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடிக்க உருவாக உள்ள ‘மஹா’ படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தின. காவி உடை அணிந்த ஹன்சிகா, கஞ்சாவைப் புகைப்பது போன்ற புகைப்படமும், பின்னணியில் சாமியார்கள் இருப்பது போன்ற போஸ்டர்களும் இந்துக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தின. பல்வேறு தரப்பினர் அந்த போஸ்டர்களை நீக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

அந்த போஸ்டர்களுக்கு தெலுங்கானாவில் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதீய ஜனதா கட்சி எம்எல்ஏ ராஜா சிங் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவருடைய டுவிட்டரில், “உங்கள்(இயக்குநர் ஜமீல்) ‘மஹா’ படத்தின் போஸ்டர் இந்துக்களை தரக் குறைவாகக் காட்டுகிறது. நீங்கள் பர்தா அணிந்த பெண்கள் புகைபிடிப்பது போன்ற, பின்னணியில் உங்களது புனித இடங்களுடன் கூடிய போஸ்டரை வெளியிடுவீர்களா ?. உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா அப்படி வெளியிட,” என கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். அவருக்கு ஆதரவாக டுவிட்டரில் பலரும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

Sharing is caring!