கடந்த நான்கு நாட்களில் மட்டும் சுமார் 9 கோடி வசூல்

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்துள்ள ‘சண்டக்கோழி 2’ படம் கடந்த வாரம் வெளியானது. தெலுங்கில் ‘பந்தம்கோடி 2’ என்ற பெயரிலும் அதே நாளில் வெளியானது. முதல் பாகம் அளவிற்கு இந்தப் படம் இல்லை என்று பேசப்பட்டாலும், தெலுங்கில் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

விஷால் நடித்து தெலுங்கில் இதுவரை வெளிவந்த படங்களிலேயே இந்தப் படத்தின் வசூல் அதிகம் என்கிறார்கள். கடந்த நான்கு நாட்களில் மட்டும் சுமார் 9 கோடி வசூலித்து அதில் 5 கோடியை பங்குத் தொகையாகக் கொடுத்துள்ளது. படத்தை வாங்கிய அனைவருக்கும் லாபம் உறுதியாகக் கிடைக்கும் என்கிறார்கள்.

விஷால் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த ‘இரும்புத் திரை’ படம் கூட தெலுங்கில், ‘அபிமன்யுடு’ என்ற பெயரில் வெளியாகி நல்ல வசூலைக் கொடுத்தது. அதற்கடுத்து ‘சண்டக்கோழி 2’ படமும் வெற்றிப் படமாக அமைந்து, விஷாலின் மார்க்கெட்டை தெலுங்கில் உயர்த்தியுள்ளது.

தமிழிலும் இந்தப் படம் எதிர்பார்த்த பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் நல்ல வசூலைக் கொடுத்து வருகிறது என்கிறார்கள். தமிழ், தெலுங்கு இரண்டிலும் சேர்த்து இந்தப் படம் வெற்றிப் படமாக அமைந்துவிட்டது.

Sharing is caring!