கடும் சோகத்தில் அருண் விஜயின் முறை பொண்ணு! வனிதாவுக்கு இவ்வளவு பெரிய குடும்பமா?

பொதுவாக பண்டிகைகளின் போது குடும்பங்கள் ஒன்று சேர்வது வழக்கம்.

அந்த வகையில் நடிகர் விஜயகுமார் குடும்பத்தினரின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தீபாவளியை முன்னிட்டு நடிகர் விஜயகுமார் மகன், மருமகள், மருமகன், மகள்களுடன் இருக்கும் குடும்ப புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல்.

இதில் நடிகைகள் ஸ்ரீதேவி விஜயகுமார், பிரீதா விஜயகுமார், இயக்குநர் ஹரி. மற்றும் நடிகர் அருண் விஜய் அவரது மனைவி மற்றும் அவர்களுடைய குழந்தைகள் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

இதைப்பார்த்த விஜயகுமாரின் பேத்தியும் அனிதா விஜயகுமாரின் மகளுமான தியா, புகைப்படத்தை பகிர்ந்து ” இன்னைக்கு எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்றேன்,” என தெரிவித்து இருக்கிறார். இந்த குடும்ப புகைப்படத்தில் அவர் இடம்பெறவில்லை . இதையொட்டியே அவரது போஸ்டில் மிஸ் பண்ணுவதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிக் பாஸ் புகழ் வனிதா விஜயகுமாரின் மகள் என்பது அனைவருக்கும் தெரியும். குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்போது தனியாக குழந்தைகளுடன் வசித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!