கடைக்குட்டி சிங்கம் டீம் பாணியில் கமல்

விஸ்வரூபம் வெற்றியை தொடர்ந்து கமல் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வரூபம்-2 படம் சில வருடங்களாக பெட்டிக்குள் முடங்கி கிடந்த நிலையில் அதற்கு உயிர் கொடுக்கும் வேலைகளை துவங்கியுள்ளார் கமல். சமீபத்தில் இந்தப்படத்தின் டிரைலர், பாடல்களை வெளியிட்ட கமல், படத்தை ஆகஸ்ட்-10ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக மும்பை சென்றுள்ள கமல், அங்கே நடிகர் சல்மான் கான் நடத்திவரும் தஸ் கா தம் என்கிற ரியாலிட்டி கேம் ஷோ செட்டிற்கு விசிட் அடித்தார். அவருடன் படத்தின் நாயகி பூஜா குமாரும் இந்த நிகழ்வில் உடன் கலந்து கொண்டார்.

கமல் நடத்திவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சமீபத்தில் கூட கடைக்குட்டி சிங்கம் டீம் இப்படி கலந்து கொண்டார்கள் அல்லவா..? அதே பாணியைத்தான் கமலும் பின்பற்றியுள்ளார்.

விஸ்வரூபம் படம் வெளியாவதில் சிக்கலை சந்தித்தபோது சல்மான் கான், கமலுக்கு தனது ஆதரவை தெரிவித்ததும், அதன்பின் விஸ்வரூபம் வெளியானபோது அதன் சிறப்பு காட்சியில் கமலின் அழைப்பை ஏற்று சல்மான் கான் கலந்து கொண்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!