கட்அவுட், பால் அபிஷேகம்… மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சிம்பு

சென்னை:
மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார் சிம்பு. அவர் வெளியிட்டுள்ள வீடியோவால் சர்ச்சை எழுந்துள்ளது.

நடிகர் சிம்பு பல்வேறு காலகட்டங்களில் பல சர்ச்சைகளில் சிக்கயுள்ளார். சிம்பு என்றாலே வம்பு என்றுதான் கோலிவுட்டில் கூறுவார்கள். சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில் என் ரசிகர்கள் யாரும் எனக்கு கட்அவுட் வைக்கவேண்டாம். பால் அபிஷேகம் வைக்க வேண்டாம். அதற்கு பதில் அப்பா, அம்மாவுக்கு உடை எடுத்து கொடுங்கள் என கூறினார்.

ஆனால் இன்று அவர் அப்படியே தலைகீழாக பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு பாக்கெட்டில் வேண்டாம். அண்டா அண்டாவாக பாலபிஷேகம் செய்யுங்கள் என கூறியுள்ளார். இதற்கு தற்போது தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!