கணவர் படத்தில் டப்பிங் பேசி பாடல் பாடிய நஸ்ரியா

ஐதராபாத்:
கணவர் நடித்த படத்தையும் தயாரித்து, டப்பிங் மற்றும் ஒரு பாடலையும் பாடியுள்ளார் நஸ்ரியா.

நடிகை நஸ்ரியாவுக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் நிறைய இருக்கிறார்கள். மலையாள நடிகையான அவர் தமிழில் ராஜா ராணி படத்தில் நடித்திருந்தார். அவர் நடிப்பில் வந்த பெங்களூரு டேஸ் படம் ரசிகர்களின் மனதை அதிகம் ஈர்த்தது.

இந்நிலையில் அவர் கடந்த 2014 ல்  நடிகர் பாஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். பின் நடிக்காமல் இருந்து வருகிறார். தற்போது அவர் தன் கணவர் நடிக்கும் VARATHAN படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் டப்பிங் பேசியுள்ளதோடு ஒரு பாடலையும் பாடியுள்ளாராம்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!