கதாநாயகன் வாய்ப்பு கிடைக்க யார் காரணம் தெரியுமா?

சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த 96 படத்தை அடுத்து விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் – சீதக்காதி. பாலாஜி தரணிதரன் இயக்கும் இந்தப்படம் தான் விஜய்சேதுபதியின் 25 ஆவது படம்.

ஒரு பக்கம் குறும்படங்களில் நடித்துக் கொண்டு இன்னொரு பக்கம் சினிமாவில் துணை நடிகராக நடித்துக் கொண்டிருந்த விஜய்சேதுபதி, சீனுராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவானார்.

அவருக்கு கதாநாயகன் வாய்ப்பு கிடைக்க யார் காரணம் தெரியுமா? ஒளிப்பதிவாளரும், நடிகருமான அருள்தாஸ் தான். கார்த்தி நடித்த நான் மகான் அல்ல படத்தில் அவர் நடித்தபோது அப்படத்தில் சின்ன வேடத்தில் நடித்த விஜய்சேதுபதி உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று படத்துக்காக சீனுராமசாமி ஆபிஸ் போட்டு 3 மாதங்களாகியும் சரியான ஹீரோ கிடைக்கவில்லை. கடைசியில் நாடோடிகள் படத்தில் நடித்த பரணியை ஹீரோவாக புக் பண்ணி 1 லட்சம் அட்வான்ஸும் கொடுத்த நிலையில் கடைசிநேரத்தில் அவர் நடிக்க முடியாமல்போனது.

பிறகு, விதார்த்தை நடிக்க வைக்க எண்ணினார் சீனுராமசாமி. அதன்பிறகு, அழகர்சாமியின் குதிரை படத்தின் நடித்த இனிகோவே ஹீரோவாக்க எண்ணினார். அவரும் வேண்டாம் என்று முடிவு பண்ணப்பட்டபோது, நடிகர் அருள்தாஸ் தான் சீனுராமசாமியிடம் விஜய்சேதுபதியை அறிமுகப்படுத்தி சிபாரிசு செய்திருக்கிறார்.

அதன் பிறகுதான் விஜய்சேதுபதியின் வாழ்க்கை டேக் ஆப் ஆனது. விஜய் சேதுபதியை தன்னிடம் நடிகர் அருள்தாஸ்தான் அறிமுகப்படுத்தினார் என்பதை டுவீட் மூலம் தெரியப்படுத்தியிருக்கிறார் சீனுராமசாமி.

Sharing is caring!