கதைக்கு பாராட்டுகள் பெற்று தெலுங்கில் டப் ”ஜான்சி”யாக..

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ், இவானா நடித்து வெளியான படம் நாச்சியார். இந்த படத்தில் அதிரடி போலீசாக நடித்திருந்தார் ஜோதிகா. கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இப்படத்தின் டீசரில் ஜோதிகா பேசியிருந்த வசனம் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இருப்பினும் நாச்சியார் படத்தின் கதைக்கு பாராட்டுகள் கிடைத்தன. படம் பெரிய அளவில் வசூலிக்கவில்லை. இந்நிலையில், தற்போது நாச்சியார் படத்தை தெலுங்கில் டப் செய்துள்ளனர். ஜான்சி என்ற பெயரில் ஆகஸ்ட் 3-ந்தேதி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியாகிறது.

Sharing is caring!