கத்தி இந்தி ரீமேக் உரிமம் “பத்மாவத்” இயக்குனருக்கே

ஏ.ஆர்.முருகதாஸ்  இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான கத்தி படத்தின் இந்தி ரீமேக் உரிமத்தை ‘பத்மாவத்’ படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி பெற்றார்.

விஜய் நடிப்பில் 2014ம் ஆண்டு வெளியான படம் கத்தி. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமத்தை பத்மாவத் படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி பெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதில் ஹீரோவாக நடிக்க அக்‌ஷய் குமார் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Sharing is caring!