கத்துக்கோங்கப்பா… இதை பார்த்தாவது கத்துக்கோங்க…

மும்பை:
கத்துக்கோங்கப்பா… இதை பார்த்தாவது கத்துக்கோங்க… என்று மீ டூ ஹேஸ்டேக்கில் ஒரு வீடியோ செமயாக உலா வருகிறது. என்ன வீடியோ தெரியுங்களா?

இந்திய சினிமாவில் எத்தனையோ கிரிக்கெட் வீரர்கள் இருந்தாலும் சிலர் மீது அனைவருக்கும் மிகுந்த மரியாதை இருக்கும். அப்படிப்பட்ட வரிசையில் இந்திய பெருஞ்சுவர் என்று அழைக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டுக்கு தனி இடம் உண்டு.

இவரை ஒரு பிரபல ஆங்கில தொலைக்காட்சி சில வருடங்களுக்கு முன்பு பேட்டி எடுத்துள்ளனர். அப்போது பேட்டி முடிந்தபிறகு அந்த தொகுப்பாளினி டிராவிட்டிடம் உங்களது பெரிய ரசிகை என்றும் உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் எனவும் கூறி நெருங்கி வந்தார்.

இதனால் பதறிய டிராவிட் தள்ளிப்போ என்று கூறிவிட்டு உன் வயதென்ன? படிப்பில் கவனம் செலுத்து என்று கூறிவிட்டு வெளியேற முயன்றார். பின்பு தான் அது Prank என்று தெரிந்தது. கண்ணியமாக நடந்துகொண்ட டிராவிட்டின் இந்த வீடியோவை தற்போது சிலர் #MeToo ஹேஷ்டேக்கில் பகிர்ந்துவருகின்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!