கனடாவில் மட்டும் ரூ.1.3 கோடிக்கு விற்பனையான சர்கார்

சென்னை:
கனடாவில் மட்டும் ரூ.1.3 கோடிக்கு சர்கார் படம் விற்பனையாகி உள்ளதாம்.

சர்கார் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம். இப்படத்திற்கு உலகம் முழுவதும் வியாபாரம் சூடுப்பிடித்துள்ளது. மெர்சல் படம் வெளிநாட்டில் மட்டுமே ரூ.75 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

அதனால் சர்கார் படத்தை பலரும் போட்டி போட்டு வாங்க முயற்சி செய்தனர். இந்நிலையில் சர்கார் கனடாவில் மட்டுமே ரூ 1.3 கோடி கொடுத்து வாங்கியுள்ளார்களாம். இதன் மூலம் ரஜினி படத்திற்கு பிறகு பிரமாண்ட தொகைக்கு சென்றது சர்கார் தான் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!