கனவை நிறைவேற்றிக் கொண்டார்… ஜெயம் ரவியின் கனவு நிறைவேற்றம்

சென்னை:
போயஸ்கார்டனில் வீடு வாங்க வேண்டும் என்ற ஜெயம் ரவியின் கனவு நிறைவேறியுள்ளது. எப்படி தெரியுங்களா?

ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிப்பில் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் ஜெயம் ரவிக்கு அந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தனது நீண்ட நாள் கனவை நிறைவேற்றியிருக்கிறாராம். ஜெயம் ரவி ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருப்பதாக டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் தயாரிப்பில் மூன்று படங்களில் ஜெயம்ரவி நடிக்க ஒப்புக்கொள்ள காரணம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி திரையுலகில் அனைவரிடமும் எழுந்தது. சென்னை நகரில் முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதியாக போயஸ் கார்டன் பகுதி இருந்து வருகிறது.

இப்பகுதியில் வீடு விலைக்கு வாங்க வேண்டும் என்பது ஜெயம் ரவியின் நீண்ட நாள் கனவு என்கின்றனர். நிறுவனத்திற்கு சொந்தமாக சென்னை போயஸ் கார்டனில் சுமார் 20 கோடி மதிப்பில் ஒரு தனிவீடு இருக்கிறதாம். அந்த வீட்டை ஜெயம் ரவி வாங்க முயற்சித்த போது பணத்திற்கு பதிலாக தங்கள் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்தால் வீட்டை தருவதாக கூறியதால் மூன்று படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள். உண்மையா என்பதை ஜெயம் ரவிதான் சொல்லணும்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!