கனா படத்தின் லாபம் யாருக்கு… நடிகர் சிவகார்த்திகேயன் சொல்றார்

சென்னை:
கனா படத்தின் லாபத்தில் நல்ல செயல் செய்ய போகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

நடிகர் சிவகார்த்திகேயன் ரஜினி, கமல், அஜித், விஜய் என போட்டி நிறைந்த இந்த சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். சமீபத்தில் அவர் கனா படத்தின் மூலம் தயாரிப்பாளரானார்.

அவரின் நண்பர் அருண் ராஜா காமராஜ் இயக்கி ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் பேசிய சிவகார்த்திகேயன் கூறியதாவது:

இப்படத்தின் லாபம் என் நண்பர்களுக்கு தான். ஆனால் அதில் ஒரு பகுதியை கனாவின் கிளைமாக்ஸில் யாருடைய வலியைச் சொல்லியதோ, அவர்களுக்காக பயன்படுத்தப்படும். மேலும் நான் யாருக்கு என்ன செய்யப் போகிறேன் என்பதை சொல்லவே மாட்டேன்.

நமக்கு சோறு போடும் 4, 5 விவசாயிகளின் வாழ்க்கையையாவது இந்த லாபம் மாற்றும் என உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன். இதை சொல்லக்கூடாது என நினைத்தேன். ஆனால் அது சரியாக இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!