கன்னட மொழியில் விவேகம் படத்திற்கு செம வரவேற்பு

சென்னை:
விவேகம் கன்னட மொழியில் செம வரவேற்பை பெற்றுள்ளது என்று தெரிய வந்துள்ளது.

அஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் விவேகம். சிவா இயக்கத்தில் வந்த இப்படத்தை சிலரின் விமர்சனங்களே பாதி வசூலை பாதித்துவிட்டது எனலாம். நஷ்டங்களும் ஏற்பட்டது.

இந்நிலையில் இயக்குனர் மீது ரசிகர்களுக்கு ஒரு பக்கம் கோபம் இருக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் இப்படம் கன்னட மொழியில் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் 70 இடங்களில் 75 திரைகளில் என மொத்தம் 275 காட்சிகளாம். கமாண்டோ என்ற பெயரில் வரும் இப்படத்திற்கு தியேட்டர் முன்பதிவுகள் நிரம்பி விட்டதாம்.

படத்திற்கு பெரும் டிமாண்ட் ஏற்பட்டுள்ளதால் இன்று மேலும் 5 திரையரங்குகளில் படம் வெளியாகியுள்ளது. இந்த படம் வெளியாகும் திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மேலும் பால் அபிஷேகம், பட்டாசு வெடித்தல் என ரசிகர்கள் மாஸ் காட்டியுள்ளார்கள்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!