கமலுக்கு பேரனாகிறார் சிம்பு… இந்தியன் 2 படத்தில்தான்!!!

சென்னை:
கமலுக்கு பேரனாக நடிக்கிறார் சிம்பு என்று தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்வானின் ரசேவில் நடைபெற்று வருகிறது. இதில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க, கமலுடன் தைவான் முன்னணி நடிகை பே சுசி என்பவரும் நடித்துள்ளார்.

அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஷங்கரின் ஆதர்ச இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்தில் இல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படம் தனக்கு கடைசி படமாக இருக்கும் என முன்னரே கமல் அறிவித்திருந்தார்.

இப்படத்துக்குப் பின்னர் முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளார் கமல். சிம்பு இப்படத்தில் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தாத்தா கமலுக்கு பேரனாக நடிக்கிறார் என்று தெரிய வந்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!