கமல்ஹாசன் மீது முட்டை, செருப்பு வீச்சு!

நடிகர் கமல்ஹாசன் கோட்சே பற்றி பேசியது பெரிய சர்ச்சையாகி தேசிய அளவில் அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மறுபுறம் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியினை விளம்பரப்படுத்தும் பணிகளை விஜய் டிவி துவங்கியுள்ளது.

இந்நிலையில் இன்று அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்ற பரப்புரை கூட்டத்தில் முட்டை, கல், செருப்பு ஆகியவற்றை மர்ம நபர்கள் வீசியுள்ளனர்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் தற்போது போரட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் சூலூர் தொகுதியில் நாளை கமல்ஹாசன் பிரசாரத்துக்கு செல்லவிருந்த நிலையில் அதற்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ளது.

Sharing is caring!