கமல் மீது விவேக் குற்றச்சாட்டு…..!

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் திரைப்படத்தாலேயே தனது படம் நாசமானதென நடிகர் விவேக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) வெள்ளைப்பூக்கள் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன்போதே நடிகர் விவேக் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதுகுறித்து தெரிவித்த அவர், “நான் நகைச்சுவையாக நடித்த பல படங்கள் பெரிய வெற்றியை தந்துள்ளன. எனது நகைச்சுவைக்காகவே படங்கள் ஓடியிருக்கின்றன. ஆனால், கதாநாயகனாக நடித்த படங்கள் நிறைய பிரச்சினைகளை சந்தித்தன. அதை நான் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் கூறினேன். எனினும் அவர்கள் விடாப்பிடியாக நின்று என்னை நடிக்க வைத்தனர்.

பாபநாசத்தால் ‘இவன் தான் பாலா’ திரைப்படம் சரியாக ஓடவில்லை. அந்த திரைப்பட வெளியீட்டின்போது கமல்ஹாசனின் பாபநாசம் திரைப்படம் திடீரென வந்து எனது படத்தை நாசம் செய்துவிட்டது” எனக் கூறினார்.

Sharing is caring!