கமல் வீட்டிற்குள் புகுந்த திருடன் சிக்கினான்… பரபரப்பு

சென்னை:
கமல் வீட்டிற்குள் புகுந்த திருடன் கைது செய்யப்பட்டுள்ளான். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கமல்ஹாசன் நடிகர் என்பதை தாண்டி தற்போது அரசியல்வாதியாக மாறிவிட்டார். கமல் சென்னையில் தங்கியிருக்கும் ஆழ்வார்பேட்டையில் ஒருவர் பின் வழியாக ஏறி குதித்துள்ளார். இதை பார்த்து அவரை வளைத்து பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதையடுத்து அவரை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதையடுத்து கொள்ளை முயற்சி உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!