கமல் ஹாஸனின் லேட்டஸ்ட் ட்விட்டுக்கு இதான் அர்த்தமாம்!

கமல் ஹாஸனின் ட்விட்டர் பக்கம் ரகளையாகி வருகிறது. காரணம் அவர் போடும் ட்வீட்டுகள். சுத்தத் தமிழ், புதிய தமிழ் வார்த்தைகளைப் பிரயோகிக்கும் கமல் ஹாஸன், அதில் ஒரு கமா அல்லது வார்த்தைப் பிழையை கவனிக்காமல் விடுவதால் அர்த்தமே மாறிப் போய் ஆளாளுக்கு ஒரு அர்த்தம் கொள்ள வேண்டியுள்ளது. இன்றைய அவரது விவசாயிகள் ட்வீட், மீடியா, சமூக வலைத்தள பயனர்கள் அனைவரையும் குழப்பியடித்தது.

அகில இந்திய விவசாயிகள் கட்சி, வரை கடந்து கூடுவதில் மகிழ்ச்சி. இனியும் சேராதிருப்போர் சேர்க. இது மிக முக்கியமான மக்கள் குரல். பசிக்கு மதமில்லை. பசிக்கு பதில் விவசாயமும்தான். மதம் கடந்து மக்களைக் காப்போம். மக்களே மையம். வாழிய பாரதம். இதில் முதல் வரிதான் பெரும் குழப்பத்துக்குக் காரணம். கமல் ஜனவரியில்தானே கட்சி ஆரம்பிப்பதாகச் சொன்னார். அதற்குள் அகில இந்திய விவசாயிகள் கட்சி எப்படி வந்தது? அகில இந்திய விவசாயிகள் சங்கம்தானே உள்ளது? என்று குழம்பிப் போனார்கள். பின்னர் அவரது அலுவலகத்தில் விசாரித்தபோது, “கமல் சார் எங்கே கட்சியில் சேரச் சொன்னார்? எல்லா விவசாயிகளும் கட்சி, பேதம் கடந்து ஒன்று சேருங்கள் என்றுதான் கூறியிருக்கிறார். சேராதிருப்போர் சேர்க என்றால், ஏதும் இயக்கத்தில் சேரச் சொல்லவில்லை. அனைவரும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும், என்று அர்த்தம். கமல் சார் ட்விட் தெளிவாகத்தான் உள்ளது,” என்றனர். அகில இந்திய விவசாயிகள், என்ற இடத்தில் ஒரே ஒரு கமா மட்டும் போட்டிருந்தால் இவ்வளவு குழப்பமில்லையே ஆண்டவா!!

Sharing is caring!