கமிட்டாகியிருக்கிறார் மேகா ஆகாஷ்

மேகா ஆகாஷ் தமிழில் நடித்த முதல் படம் ஒரு பக்க கதை. ஆனால் அப்படம் இன்னும் வெளிவரவில்லை. அதையடுத்து தெலுங்கிற்கு சென்று நிதினுக்கு ஜோடியாக இரண்டு படங்களில் நடித்தவர் மீண்டும் தமிழில் என்னை நோக்கி பாயும் தோட்டா, பேட்ட, பூமராங், வந்தா ராஜாவாதான் வருவேன் ஆகிய படங்களில் நடித்தார். இதில் பேட்ட மட்டும் திரைக்கு வந்துள்ளது. வந்தா ராஜாவாதான் வருவேன் பிப்ர வரியில் வெளியாகிறது.

இந்தநிலையில், தற்போது நானி தெலுங்கில் நடிக்கும் 24வது படத்தில் தற்போது கமிட்டாகியிருக்கிறார் மேகா ஆகாஷ். விக்ரம் குமார் இயக்கும் இந்த படத்தில் நடிக்க பல நடிகைகள் போட்டி போட்ட நிலையில், இறுதியில் இந்த வாய்ப்பு மேகா ஆகாசுக்கு கிடைத்திருக்கிறது.

Sharing is caring!