கருணாசின் டிரைவர் தற்கொலை முயற்சி… பரபரப்பு

சென்னை:
கருணாஸின் டிரைவர் கார்த்திக் உட்பட 3 பேர் மண்ணெண்ணெய் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காமெடி நடிகராக இருந்து பின்னர் அரசியலில் குதித்தவர் கருணாஸ். அவர் தற்போது திருவாடானை தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.
இந்நிலையில் இவரின் கார் டிரைவர் தற்கொலை முயற்சி செய்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

சென்ற மாதம் கருணாஸ் கைதானபோது பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது. அதற்காக கருணாஸின் டிரைவர் கார்த்திக் உட்பட மூன்று பேர் கைதாகினர். பின் ஜாமீனில் வெளிவந்தனர்.
இந்நிலையில் போலீசார் அவர்களை தாக்கியதாக கூறி மூவரும் மண்ணெண்ணெய் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

அவர்கள் மூவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!