கருணாநிதி இறுதி ஊர்வலம்… சல்யூட் அடித்த ஜெயம் ரவி மகன்

சென்னை:
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி இறுதிப்பயணத்தின் போது எழுந்து நின்று வணக்கம் செலுத்தி உள்ளான் நடிகர் ஜெயம் ரவியின் மகன்.

ஜெயம் ரவி நடித்த டிக் டிக் டிக் படத்தில் அவரது மகன் ஆரவ்வும் நடித்திருந்தார். நேற்று முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் நடந்தது. அதில் பல பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இறுதி ஊர்வலம் டிவியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதை பார்த்து ஜெயம் ரவியின் மகன் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் சல்யூட் செய்துள்ளார். அந்த புகைப்படத்தை ஜெயம் ரவி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!