கருணாநிதி மறைவை ஒட்டி சர்கார் படப்பிடிப்பு ரத்து

தி.மு.க தலைவர் மரணமடைந்ததை அடுத்து லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வந்த சர்கார் படத்தின் படப்பிடிப்பு இன்று ரத்து செய்யப்பட்டது.

தமிழகத்தின் மூத்த தலைவர் மு.கருணாநிதியின் மறையொட்டி நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை  முதல் கருணாநிதியின் உடல் ராஜாஜி இல்லத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு பலரும் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் லாஸ் வேகாஸ் நகரில் நடந்து வரும் சர்கார் படத்தின் படப்பிடிப்பு இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் சர்கார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

Sharing is caring!