கருணாநிதி வாழ்க்கையை நடிக்க பிரகாஷ் விருப்பம்

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வாழ்க்கை வரலாறைத் தொடர்ந்து கருணாநிதி வாழ்க்கையை யாராவது படமாக்கினால், அதில் நடிக்க விருப்புவதாக பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் வாழ்க்கை சினிமா படங்களாகின்றன. எம்.ஜி.ஆர். வாழ்க்கையை படமாக எடுக்கின்றனர். ஜெயலலிதா வாழ்க்கை வரலாறைப் படமாக்க 3 இயக்குனர்கள் மத்தியில் போட்டி நிலவுகிறது. ஜெயலலிதா வேடத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, வித்யாபாலன் ஆகியோர் பரிசீலனையில் உள்ளனர்.

மறைந்த ஆந்திர முதலமைச்சர்கள் என்.டி.ராமராவ், ஒய்.ராஜசேகரரெட்டி ஆகியோர் வாழ்க்கையையும் படமாக்கி வருகிறார்கள். என்.டி.ராமராவ் வேடத்தில் அவரது மகனும், நடிகருமான பாலகிருஷ்ணா நடிக்கிறார். ராஜசேகர ரெட்டியாக மலையாள நடிகர் மம்முட்டி நடிக்கிறார். இந்த படங்கள் வரிசையில் கருணாநிதி வாழ்க்கை வரலாறும் படமாக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அவரது வாழ்க்கை படமாக்கப்பட்டால் திரையுலகிலும், அரசியலிலும் அவர் நிகழ்த்திய சாதனைகள் காட்சிப்படுத்தப்படும். கருணாநிதி வேடத்தில் நடிக்க பிரகாஷ் ராஜ் விருப்பம் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி தமிழ் சினிமாவுக்கு ஆற்றிய பணிகள் முக்கியமானது. கலைத்துறை மீது அவருக்கு இருந்த ஆர்வத்தை அவரது படைப்புகள் சொல்லும். கருணாநிதியைப்போல் இனி ஒரு தலைவர் உருவாகப்போவது இல்லை. அவரது வாழ்க்கையை யாராவது படமாக்கினால் அதில் கருணாநிதி வேடத்தில் நான் நடிக்க வேண்டும். அவருடைய வாழ்க்கையை நான் வாழ முடியாது. ஆனால், அவர் வேடத்தில் நடிக்க ஆசையாக இருக்கிறது. அப்படி ஒரு வாய்ப்புக்கிடைத்தால் அது வரப்பிரசாதமாக இருக்கும்

என பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.

Sharing is caring!