கருத்து சொல்லும் கதையில் நடிப்பேன்

50 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்ட ஜி.வி.பிரகாஷ், டார்லிங், திரிஷா இல்லன்னா நயன்தாரா படங்களுக்குப் பிறகு நடிகராகவும் பிசியாகி விட்டார். அரை டஜன் படங்களில் நடித்து வரும் அவர், ஜல்லிக்கட்டு, விவசாய போராட்டங்களிலும் கலந்து கொண்டு தனது சமூக ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், இதுவரை கமர்சியல் கதைகளாகவே நடித்து வந்த ஜி.வி.பிரகாஷ், தற்போது நடித்து வரும் அடங்காதே படத்தில் முதன்முறையாக கருத்து சொல்லும் கதையில் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், அடங்காதே படத்தில் சமூகத்துக்கு தேவையான ஒரு மெசேஜ் சொல்கிறேன். இதன்பிறகு இனிமேல் நான் நடிக்கும் கமர்சியல் படங்களிலும் கூட ஏதேனும் ஒரு நல்ல கருத்தினை விதைப்பேன் என்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

Sharing is caring!