கருத்து பரப்புவர்களுக்கு எச்சரிக்கை

நடிகர் விஜய், தனது 63வது படமாக அட்லி இயக்கத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்நிலையில், விஜய் சார்பாக அவரின் மக்கள் இயக்க தலைமை பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

விஜய்யின் முன்னாள் மக்கள் தொடர்பாளராக(பிடி செல்வகுமார்) நீண்டகாலமாக பணிபுரிந்தவர், தற்போது வேறு சில காரணங்களால் அப்பணியில் இல்லை, என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர கடமைப்பட்டுள்ளேன். மேலும், அவர், நமது மக்கள் இயக்கத்தில் எந்த பொறுப்பும் வகிக்கவில்லை.

இருப்பினும், விஜய் பெயரை பயன்படுத்தி ஒரு சிலர் கருத்தை வெளியிட்டு, விஜய்யின் கருத்து போன்று ஊடகங்களில் வெளியிடுவதை விஜய் ஏற்கவில்லை. விஜய் எந்த காலக்கட்டத்திலும் சக நடிகர்களையோ, பொது மனிதர்களையோ இழிவாக தரம் தாழ்ந்து ஒப்பீட்டு பேசியதில்லை. அப்படி யாரையும் பேச சொல்லி யாருக்கும் அதிகாரம் அளிக்கவில்லை என்பதை இங்கு தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

ஆகவே, விஜய் குறித்த தகவல்களை ஊடகங்களில் பேசுவது, விவாதிப்பது, பங்கேற்று கருத்து கூறுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவோரின் கருத்துக்களை யாரும் நம்ப வேண்டாம்.

Sharing is caring!