கருப்பு ஆடுகளால் பாலியல் ரீதியான தொல்லைகள் ஏற்பட்டு சினிமாவின் பெயர் கெடும் நிலை – சமந்தா

மொபைல் கடை திறப்பு விழாவிற்காக மதுரை வந்திருந்தார் நடிகை சமந்தா. கடையை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் சமந்தா பேசியதாவது : தமிழகத்தில் ரசிகர் இல்லாமல் நான் இல்லை, எனது வெற்றிக்கு ரசிகர்களே முக்கிய காரணம். நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துகள்.

சினிமா எனக்கு கடவுளுக்கு சமமானது, அதில் எந்த குறையும் இல்லை. 10 ஆண்டுகளாக இருக்கிறேன். பாலியல் ரீதியான தொல்லைகளை சந்தித்தது இல்லை. எல்லா துறையிலும் இருப்பது போன்று சினிமா துறையிலும் ஒரு சில கருப்பு ஆடுகளால் பாலியல் ரீதியான தொல்லைகள் ஏற்பட்டு சினிமாவின் பெயர் கெடும் நிலை ஏற்படுகிறது.

இவ்வாறு சமந்தா கூறினார்.

Sharing is caring!