கர்நாடகாவில் வசூலை அள்ளி சாதித்த ரஜினியின் 2.0

சென்னை:
கர்நாடகாவில் முதல் நாளே ரூ. 8.5 கோடி வசூல் வேட்டை நடத்தி உள்ளது ரஜினியின் 2.0 படம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2.0 படம் நேற்று பிரமாண்டமாக திரைக்கு வந்தது. இதில் அக்‌ஷய்குமார், எமி ஜாக்ஸன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் கண்டிப்பாக வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்த்தார்கள். அதேபோல் பல வசூல் சாதனைகளை செய்துள்ளது.

2.0 கர்நாடகாவில் முதல் நாளே ரூ 8.5 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது, இதன் மூலம் தமிழ் படங்களில் முதல் நாள் அதிக வசூல் செய்த படமாக 2.0 இடம்பெற்றுள்ளது. மேலும், கர்நாடகாவில் இதற்கு முன் தமிழ் படங்களில் முதல் நாள் வசூலில் கபாலி தான் அதிகம். அப்படம் ரூ 7.5 கோடி வசூல் செய்திருந்தது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!