கலக்கல்… செம… சூப்பர்… சஞ்சு படத்தை பாராட்டி தள்ளிய தனுஷ்

சென்னை:
‘எப்படி ஒவ்வொரு முறையும் இப்படி ஒரு படத்தை எடுக்கின்றீர்கள் ராஜ் குமார்ஹிரானி அவர்களே, ரன்பீர் நீங்கள் கலக்கி விட்டீர்கள் என்று சஞ்சு படத்தை பாராட்டி தள்ளியுள்ளார் நடிகர் தனுஷ்.

தனுஷ் தற்போது வடசென்னை ரிலிஸில் பிஸியாகவுள்ளார். இப்படம் முடிந்த கையோடு எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இவர் இந்தி சஞ்சு படத்தை பார்த்துள்ளார், படத்தை பார்த்துவிட்டு டுவிட்டரில் புகழ்ந்து தள்ளிவிட்டார்.

‘எப்படி ஒவ்வொரு முறையும் இப்படி ஒரு படத்தை எடுக்கின்றீர்கள் ராஜ் குமார்ஹிரானி அவர்களே, ரன்பீர் நீங்கள் கலக்கி விட்டீர்கள், ஹிரானி உங்கள் படத்தை பார்க்கும் போது மேலும், ஒரு நல்ல மனிதனாக மாற தோன்றுகிறது.

ஆனந்த கண்ணீருடன் தான் தியேட்டரை விட்டு வந்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!