கல்யாணத்திற்கு முதலே கர்ப்பமான நடிகை

பாலிவுட் நடிகை நேகா தூபியாவின் திருமணம் சமீபத்தில் நடந்தது. நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் அங்கத் பேடி என்ற நடிகரை கடந்த மே மாதம் 10-ம் தேதி இவர் திருமணம் செய்துக் கொண்டார். அவர் திருமணத்தின் போது கர்ப்பமாக இருந்ததாகவும் அதனால் தான் வெளியுலகத்தில் யாரையும் அழைக்காமல், தனது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து நேகா திருமணம் செய்துக் கொண்டார் என அப்போது செய்திகள் பரவியது. இது அடிப்படை உண்மை இல்லாத வதந்தி என இதற்கு அங்கத் முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில் தான் கர்ப்பமாக இருக்கும் படத்தினை சமீபத்தில் சமூக வலைதளத்தில் பகிர்ந்தார் நேகா துபியா. பிரபலங்கள் பலரும் நேகா – அங்கத் தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் ரசிகர்கள் ஒருபுறம் அந்தப் படத்தை விமர்சனத்துக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள்.

“திருமணம் ஆகி 3 மாதம் தான் ஆகிறது. ஆனால் அவரின் கர்ப்ப வயிறு ஏழெட்டு மாத கர்ப்பிணி போல தோற்றமளிக்கிறது. இவர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்தாரா என்பதைப் பற்றி வாய் திறக்க மறுக்கிறார்கள் இந்தத் தம்பதிகள்” என பலரும் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையே, ஒரு ஃபேஷன் ஷோவில் கணவருடன் ராம்ப் வாக் செய்த நேகா, “எனக்கு அடுத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றிக் கவலை இல்லை. எனது துறை சார்ந்த வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்” என்றார்.

Sharing is caring!