கழுகு 2 பட நாயகன் கிருஸ்ணாவின் அடுத்த படம்

‘கழுகு 2’ படத்தைத் தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா தற்போது ‘திருகுரல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

‘கழுகு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்க்கு அறிமுகமான நடிகர் கிருஷ்ணா. சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா, பிந்து மாதவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கழுகு 2’. ஏற்கனவே வெளியான கழுகு திரைப்படம் எதிர்பார்க்காத அளவு வெற்றி பெற்றதால் அதே குழு தற்போது இதன் இரண்டாம் பாகத்தை தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு.

‘கழுகு 2’ படத்தை  தொடர்ந்து ‘திரு.குரல்’ என்ற பெயரில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் கிருஷ்ணா. சார்லஸ் இம்மானுவேல் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார். புதுமுக இயக்குநர் பிரபு இயக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20-ம் தேதி முதல் தொடங்கும் என தகவல் கிடைத்துள்ளது.

மேலும் இயக்குநர் மகேந்திரன் இந்த படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். ஹீரோயின் மற்றும் இதர நடிகர்கள் தேர்வில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு. இசையமைப்பாளராக சாம் சி.எஸ், ஒளிப்பதிவாளராக ராஜா பட்டாசார்ஜி, எடிட்டராக வெங்கட் ரமணன் உள்ளிட்டோர் தொழில்நுட்பக் கலைஞர்களாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

Sharing is caring!