கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!

தமிழில் அம்புலி, மாயை, விலாசம், கதம் கதம், தகடு என பல படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. தற்போது டிக்கெட் என்ற படத்தில் நடித்து வருபவர், வெப்சீரிஸ்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

இதுகுறித்து சனம் ஷெட்டி அளித்துள்ள ஒரு பேட்டியில், என்னைப்பொறுத்தவரை சினிமா வேறு, வெப்சீரிஸ் வேறு என்பதல்ல. இரண்டுமே ஒன்றுதான். அவை வெளியாகும் தளங்கள்தான் வேறு. அதனால் இரண்டிலுமே நான் ஒரேமாதிரியான மனநிலையுடன்தான் நடித்து வருகிறேன் என்கிறார்.

அதோடு, சினிமாவுக்கு சென்சார்போர்டு என ஒன்று இருப்பதால் தேவையான இடங்களில் வைக்கப்படும் ஆபாச காட்சிகளை கத்தரித்து விடுகிறார்கள். ஆனால் வெப்சீரிஸ்களில் சென்சார் பிரச்சினை இல்லை. அதனால் கதைக்கு அவசியம் என்கிறபோது ஆபாச வசனங்களும், காட்சிகளும் இடம் பெற்று வருகிறது. கதைகளுக்கேற்ப செக்ஸியாக நடிப்பது தவறில்லை என்கிறார்.

Sharing is caring!