கவர்ச்சி புகைப்படம் எடுத்து வெளியிட்ட நடிகைக்கு கண்டனம்

சென்னை:
இந்தியா முழுவதும் பதற்றமான நிலை இருந்து வரும் நிலையில் கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து அதை டுவிட்டரில் பதிவேற்றிய நடிகை யாஷிகாவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

இந்தியாவே இப்போது பெரிய சோகத்தில் உள்ளது. முதலில் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பின்னர் இந்திய விமானப்படையின் அதிரடி தாக்குதல் மக்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்தது.

இருப்பினும் பாகிஸ்தானுடன் விமானத்தை தாக்கிய போது வீரர் அபிநந்தன் விமானம் விபத்தில் சிக்கியது. இதில் அவர் பாகிஸ்தானில் சிக்கிகொண்டார். அவர் எப்படியாவது தேசம் திரும்ப வேண்டும் என்று எல்லா மக்களும் வேண்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் பிக்பாஸ் புகழ் யாஷிகா படு கவர்ச்சி புகைப்படம் போட, அதைப் பார்த்த ரசிகர்கள் இந்த நேரத்தில் இது தேவையா என கடும் கண்டன குரல்கள் எழுப்பி வருகின்றனர்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!