காங்கிரஸிற்கு கண்டனம் தெரிவித்த மாதவன்

காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும், சீன பிரதமரையும் கிண்டல் செய்வது போல் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. காங்கிரசின் இந்த வித செயல்பாட்டிற்கு நடிகர் மாதவன் கண்டன பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார்.

அந்தப்பதிவில்:  இது நல்ல ரசனை இல்லை. என்ன தான் அரசியல் மாறுபாடுகள் இருந்தாலும் மோடி நமது நாட்டின் பிரதமர். அவரை குறைத்து மதிப்பிடும் வகையில் இந்த வீடியோ வெளியிட்டுள்ளீர்கள் . இது நகைப்புக்குரியதாக இல்லை. உங்களிடமிருந்து இதனை எதிர்பார்க்கவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

Sharing is caring!