காஜல் அகர்வாலுக்கு 33 வயது

நடிகை காஜல் அகர்வாலுக்கு 33 வயதாகி விட்டது. ஆனபோதும் தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வருவதால் திருமணம் பற்றி யோசிக்காமல் நடிப்பில் முழுக்கவனத்தையும் செலுத்தி வருகிறார். ஆனபோதும், மீடியாக்களை அவர் சந்திக்கும்போது திருமணம் குறித்த கேள்வியையும் முன்வைக்க தவறுவதில்லை.

சமீபத்தில் காஜல் அகர்வாலிடம் திருமணம் குறித்து கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், சினிமாவில் பிசியாக இருப்பதால் திருமணத்திற்கு இன்னும் தயாராகவில்லை. சினிமா வட்டாரத்தை சேர்ந்தவரை திருமணம் செய்ய மாட்டேன். இங்குள்ள அனைவருமே என்னிடம் நட்பாக மட்டுமே பழகுகிறார்கள். அதனால் சினிமாத்துறையை சாராத நபரையே திருமணம் செய்து கொள்வேன் என தெரிவித்துள்ளார் காஜல்.

Sharing is caring!