காஞ்சனா ரீமேக் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார் ராகவா

சமீபத்தில் வெளியான காஞ்சனா 3 திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து. ‘காஞ்சனா’ இந்தி ரீமேக்கை துவங்கி விட்டார் ராகவா லாரன்ஸ். இந்த படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் காஞ்சனா. இது முனி படத்தின் இரண்டாவது பாகமாகும். இந்த படத்தில் ஹீரோயினாக ராய் லட்சுமி நடித்திருந்தார். மேலும் சரத்குமார், கோவை சரளா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றது. இதனையடுத்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகமும் வெளியானது.  மேலும்,காஞ்சனா திரைப்படம் இந்தியில் ரீமேக்கும் செய்யப்படுகிறது. இதனையும் ராகவா லாரன்ஸ் தான் இயக்குகிறார். இந்த படத்தில் அக்‌ஷய் குமார் நாயகனாகவும், கியாரா அத்வானி நாயகியாகவும் நடிக்கின்றனர்.  இந்நிலையில்,   அக்‌ஷய் குமார் மற்றும்  ராகவா லாரன்ஸ் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராகவா.

Sharing is caring!