காஞ்சனா ஹிந்தி ரீமேக்கை கைவிட்ட ராகவா லாரன்ஸ்: காரணம் உள்ளே..

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் காஞ்சனா, வசூல் ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்ற இது முனி படத்தின் இரண்டாம் பாகமாகும்.  இதனையடுத்து காஞ்சனா இரண்டாம் பாகம், மூன்றாம் பாகமும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையே பெற்றுக் கொடுத்தது. .

இந்த திரைப்படம் வெளியாகி எட்டு வருடங்கள் கழித்து, தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தையும் ராகவா லாரன்ஸ் தான் இயக்குகிறார். மேலும் இதில் அக்‌ஷய் குமார் நாயகனாக நடிக்க, நாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தம் ஆகியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார் அக்‌ஷய் குமார்.

இந்நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தன்னை கேட்காமல் ரிலீஸ் செய்ததுள்ளதாகவும், அந்த போஸ்டரின் காட்சி அமைப்பும் தனக்கு பிடிக்காததால், காஞ்சனா ஹிந்தி ரீமேக்கை கைவிடுவதாக ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.

Sharing is caring!