காஞ்சனா -03 அறிவிப்பை விட முன்னதாக வரவுள்ளது

ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா-3 திரைப்படம், படக்குழு அறிவித்திருந்த ரிலீஸ் தேதிக்கு முன்பே வெளியாக உள்ளதாம்.

தனது அருமையான நடனத்தால் ரசிகர்களை கவர்ந்தவர் ராகவா லாரன்ஸ். நடனம் மட்டுமல்லாது நடிப்பு,இயக்கம் என பன்முகம் காட்டி வருகிறார் லாரன்ஸ்.மேலும் அவரே இயக்கி நடித்த த்ரில்லர் காமெடி கலந்த படங்களான முனி, காஞ்சனா போன்ற படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா-3 படம் உருவாகி வருகிறது. இப்படம் பிப்ரவரி 18ல் ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், பிப்ரவரி 12ஆம் தேதியே, படம் ரிலீஸ் செய்ய படக்குழு தீர்மானித்துள்ளது.

Sharing is caring!