காஞ்சனா 3 படம் பார்க்க வந்தவர் பரிதாபமாக உயிரிழப்பு

ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா 3 படம் இந்த வருட ஹிட் பட வரிசையில் இடம் பிடித்துவிட்டது. ஒரே மாதிரியான பேய் கதை என்று விமர்சனங்கள் வந்தாலும் மக்களின் ஆதரவு பெரிதாக இருக்கிறது.

எந்த இடத்தில் பார்த்தாலும் நல்ல வசூல் என்கின்றனர். அண்மையில் பெங்களூரில் பரணிதரன் என்பவர் படம் பார்க்க வந்துள்ளார், பைக்கை பார்க் செய்துவிட்டு கிளம்புபோது பைக் கட்டணம் வசூலிக்கும் நபர் ரூ. 10 கேட்டுள்ளார்.

பரணிதரன் கொடுக்க முடியாது என்று கூற இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதேநேரத்தில் இன்னொரு திரையரங்க ஊழியரும், பைக் கட்டணம் வசூலித்தவரும் பரணிதரனை மறைவான இடத்திற்கு கூட்டிச் சென்று அடித்து உதைத்துள்ளனர். இதில் பரணிதரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தற்போது பரணிதரன் இறப்பு குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Sharing is caring!