காட்சிகளுக்கு கட் இல்ல… சில வார்த்தைகள் மட்டும் 2.0 படத்தில் கட்

சென்னை:
காட்சிகள் கட் ஆகவில்லை… ஆனால் சில வார்த்தைகள் கட் ஆகி விட்டதாக தகவல்கள் 2.0 படம் பற்றி தெரிய வந்துள்ளது.

சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமிஜாக்சன் நடித்துள்ள 2.0 படம் வரும் நவம்பர் 29 ல் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 28 நிமிடங்கள் 52 நொடிகள் மட்டுமே இப்படம் இருக்கிறதாம்.

இந்நிலையில் சென்சார் போர்டு இப்படத்தில் பல வார்த்தைகளுக்கு கட் போட்டுள்ளார்களாம். ஆனால் காட்சிகளுக்கு பெரியளவில் எதுவும் கட் போடவில்லையாம்.

வசனங்களில் வரும் வார்த்தைகளில், 9, புற்று நோய், கருச்சிதைவு, ஆண்மை குறைவு, லஞ்சம், 45 வருடம், யுனிவர்சல் நிறுவனத்தில் பெயரையும் நீக்க சொல்லிவிட்டார்களாம்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!