காதலிப்பதை மறுத்துள்ள நடிகை ஓவியா

பிக்பொஸ் பிரபல்யமும் நடிகையையுமான ஓவியா மற்றும் ஆரவ் இருவரும் காதலிப்பதாக தகவல்கள் பரவிவருகின்றன. இந்தநிலையில், இந்தச் செய்தியை மறுத்துள்ள நடிகை ஓவியா, ஆரவுக்கும் தனக்கும் இடையில் காதல் என பரவிவரும் தகவல் வதந்தி எனக் கூறியுள்ளார்.

பிக்பொஸ் நிகழ்ச்சியின்போது, எனக்கும் ஆரவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன. அதனால் எமக்கிடையே சண்டைகள் ஏற்பட்டன. ஆனால், தற்போது நாம் இருவரும் சமாதானமாகி விட்டதாகவும் காதலித்து வருவதாகவும் பரவிவருகின்ற செய்திகள் வதந்தி எனவும் தானும் ஆரவும் சிறந்த நண்பர்கள் எனவும் ஓவியா வழங்கிய செவ்வி ஒன்றில் கூறியுள்ளார்.

இந்தநிலையில், தற்போது ‘ராஜ பீமா’ என்ற படத்தில் ஓவியாவும் ஆரவும் இணைந்து நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!