காதல் திருமணமா…? இல்லை இல்லை..?

நட்சத்திர ஜோடி ஆர்யா, சயீஷா திருமணம் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில், அது காதல் திருமணம் அல்ல என்றும் இருவரும் டேட்டிங் எதுவும் செல்லவில்லை என்றும் சயீஷாவின் தாயார் ஷாஹீன் பானு தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவின் ஹாட் டாபிக், ஆர்யா சயீஷாவின் திருமணம் தான். கஜினிகாந்த் படத்தில் ஜோடியாக நடித்த இருவரும், காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும், சில வாரங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. காதலர் தினத்தன்று, இருவரும் தங்களது திருமணத்தை உலகிற்கு உறுதி செய்தனர். மார்ச் மாதம் திருமணம் செய்ய உள்ளதாகவும், இரண்டு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெறுவதாகவும் தெரிவித்தனர்.

சயீஷாவின் தாயார் ஷாஹீன், ஆர்யாவை மருமகனாக ஏற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம், என்று ட்விட்டரில் எழுதி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிலையில், இருவரும் காதல் திருமணம் செய்வதாக வெளியாகி வரும் செய்திகளை, அவர் மறுத்துள்ளார். ஆர்யாவின் குடும்பத்தார் தங்களிடம் வந்து பெண் கேட்டதாகவும், தனது மகளுக்கு ஆர்யாவை பிடித்திருந்ததால், திருமணத்திற்கு ஒப்புக் கொண்டதாகவும், ஷாஹீன் தெரிவித்துள்ளார். அதற்கு முன் இருவரும் டேட்டிங் எதுவும் செல்லவில்லை என்றும் கூறியுள்ளார்.

Sharing is caring!