காதல் மனைவிக்கு ரூ.3 கோடியில் கார் பரிசளித்த பாப் பாடகர்

மும்பை:
பாப் பாடகர் நிக் தனது காதல் மனைவியும், நடிகையுமான ப்ரியங்காவிற்கு இந்திய மதிப்பில் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடிஸ் காரை பரிசாக அளித்துள்ளார்.

பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவும் அமெரிக்க புகழ் பெற்ற பாப் பாடகரான நிக் ஜோனஸும் கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இத்திருமணத்திற்கு பிறகு நிக் தனது சகோதரர்களுடன் சேர்ந்து பாடி வெளியிட்ட சக்கர் என்ற ஆல்பம் பாடலுக்கு செம்ம வரவேற்பு கிடைத்துள்ளது. அமெரிக்காவில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த அப்பாடல் யூடியுப்பில் வெளியிட்டு ஒரே வாரத்தில் மட்டும் 60 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

இதனால் பயங்கர குஷியில் இருக்கும் நிக் தனது காதல் மனைவி ப்ரியங்காவிற்கு இந்திய மதிப்பில் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடிஸ் காரை பரிசாக அளித்துள்ளார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!