காதல் வந்தால் சொல்கிறேன்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபமான ஆரவ்-ஓவியா ஆகிய இருவருமே இப்போது படங்களில் பிசியாகி விட்டனர். அதோடு, பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தபோதே அவர்கள் காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில், அதன்பிறகும் அவர்கள் காதலர்கள் போலவே சுற்றித் திரிகிறார்கள்.

இந்த நிலையில், ஆரவ்வுடனான காதல் பற்றி ஓவியா ஒரு பேட்டியில் கூறுகையில், ஆரவ்விற்கும், எனக்குமிடையே இருப்பது காதல் அல்ல, நட்பு மட்டும்தான். நல்ல நண்பர்களாக புரிதலுடன் பழகி வருகிறோம். ஒருவேளை எங்களது நட்பு அடுத்த லெவலுக்கு சென்று காதலாக மாறினால் அதை வெளிப்படையாக சொல்லி விடுவேன். நான் எதையும் மறைக்க மாட்டேன் என்கிறார் ஓவியா.

Sharing is caring!