காதில் கடுக்கன்… செம யூத் ஸ்டைலுடன் விஜய்

சென்னை:
கடைசிநாளாக வெளியிடப்பட்ட படத்தில் செம கலக்கலாக ஸ்டைலாக காதில் கடுக்கன் மாட்டி கொண்டு யூத்ஃபுல்லாக இருக்கிறார் விஜய்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் சர்கார். இந்த ப்ரோமோஷனுக்காக அந்த படத்தின் ஷீட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் தொடர்ந்து 5 நாளைக்கு வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது.

அதன்படி கடந்த ஞாயிற்று கிழமையில் இருந்து 4 நாட்களாக போட்டோக்கள் வெளியிடப்பட்டன. நேற்று 5வது மற்றும் கடைசி நாள் போட்டோ வெளியிடப்பட்டுள்ளது.

இதில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும் விஜய்யும் ஏதோ ஜாலியாக கலந்துரையாடுவது போல் உள்ளது. அப்போ படம் பயங்கர ஜாலியாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. விஜய் செம ஸ்டைலாக காதில் கடுக்கன் எல்லாம் மாட்டி கொண்டு யூத்புல்லாக இருக்கிறார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!